தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதை சூழற்சி முறையில் எல்லா பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளுவது மட்டுமின்றி தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் புதிதாக சில பணிகளையும் செய்து தரவேண்டும். என்று மேயர் ஜெகன் பொியசாமியிடம் போல்பேட்டை அலுவலகத்திலும் மாநகராட்சி அலுவலகத்திலும் பொதுமக்கள் கொடுக்கும் கோாிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில்
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் ரவுண்டான அருகில் உள்ள துறைமுக சாலையில் மாநகராட்சி இடத்தில் நடைபாதையுடன் கூடிய பல்வேறு விளையாட்டுகள் விளையாடுவதற்கான பிரத்தியேக இடம் மற்றும் சூசை நகர் பகுதியில்
புதியதாக கட்டப்பட்டு வரும் பொது சுகாதார வளாகம் ஆகியவற்றை மேயர் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், கவுன்சிலர் முத்துவேல், வட்ட செயலாளர் பிரசாந்த், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நேர்முக உதவியாளா் துரைமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பா் உள்பட பலர் உடனிருந்தனர்.

