தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா 21ம் தேதி செவ்வாய்கிழமை மாவட்ட கலைஞர் அரங்கத்தில் வடக்கு மாவட்ட திமுக ஆலோசனை அமைச்சர் கீதாஜீவன் தகவல். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
திமுக தலைவரும் தமிழக முதலமைசச்சருமான முக.ஸ்டாலின் அறிவுரையின்படி முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடுவது குறித்தும் வரும் 26ம்தேதி மறைந்த ஓருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் நகர்மன்ற தலைவருமான பெரியசாமி 7ம் ஆண்டு நினைவு தினம் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனை கூட்டம் வரும் 21ம் தேதி செவ்வாய்கிழமை மாலை 5 மணியளவில் மாவட்ட கலைஞர் அரங்கத்தில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மாநகர நகர ஓன்றிய பகுதி பேரூர் கழக செயலாளர்கள் சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் இதனையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ள வேண்டும். என்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில்தொிவித்துள்ளார்.

