தூத்துக்குடி கழிவு நீர் கால்வாயை அமைச்சர் கீதாஜீவன் தனது சொந்த செலவில் தூர்வாரும் பணியை மேற்கொண்டார்.
கனமழை எச்சாிக்கை காரணமாக தூத்துக்குடி மாநகரத்தில் பல்வேறு முன்னெச்சாிக்கை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி காிக்களம் காலணி பகுதியில் கழிவு நீர் கால்வாயை தனது சொந்த செலவில் தூர் வார வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஏற்பாடு செய்தாா். மேலும் அங்கு நடைபெற்று வரும் பணியையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் எடிண்டா, வட்டப்பிரதிநிதி பாஸ்கர் பலர் உடனிருந்தனர்.

