December 1, 2025
#செய்தி #தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் மழைநீரை வெளியேற்றும் வடிகால்களை கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் பார்வையிட்டனர்.

தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மழைநீரை வெளியேற்றும் வடிகால்களை சுத்தப்படுத்தி அகலப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கரிக்களம் காலனி, சவேரியானா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வடிகால்களை கலெக்டர் லட்சுமிபதி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீரை வெளியேற்றுவதற்கு ஏற்கனவே பக்கிள் ஓடை இருந்தாலும், தற்போது மீன்வளக் கல்லூரி முதல் புறவழிச் சாலை வரை, சங்கரப்பேரி விலக்கில் இருந்து ஓடை வரை, பெல் ஹோட்டல் முன்பு, சவேரியாணா அருகில், ஸ்டேட் பாங்க் காலனி முதல் திரேஸ்புரம் வரை, செல்சீனி காலனியில் இருந்து அன்னம்மாள் கல்லூரி வழியாகவும், கருணாநிதி நகர் இனைக்கும் சாலை, முத்து நகர் கடற்கரை வழியாக என புதிய வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது. எனவே, மாநகர மக்கள் மழை குறித்து எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம், மாநகராட்சி நிர்வாகமானது தயார் நிலையில் இருக்கின்றது என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ரெக்ஸ்லின், ரிக்டா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகரன், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், துணை அமைப்பாளா ஆர்தர் மச்சாது, போல்பேட்டை பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்பட பலர் உடனிருந்தனர்.