December 1, 2025
#செய்தி #தூத்துக்குடி மாவட்டம்

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன அமைச்சர் கீதாஜீவன் தகவல்,

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் வடிகால்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மழைநீரை வெளியேற்றும் பிரதான கால்வாயாக உள்ள பக்கிள் ஓடையில் உள்ள அடைப்புகள், தேவையற்ற கழிவு பொருட்களை அகற்றி சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். இதேபோன்று கரிக்களம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியையும் அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் கூறுகையில் மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் மூலம் கடலுக்கு செல்லும், அனைத்து வழித்தடத்திலும் உள்ள அடைப்புகள் மற்றும் கழிவுகள் எல்லாம் அகற்றப்பட்டு சீரான முறையில் மழைநீர் வழிந்தோடும் வகையில் முழுமையாக பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓரு சில பகுதிகளில் மழைநீர் தேங்கினாலும் அதையும் பல்வேறு வகையில் உடனடியாக அப்புறப்படுத்துவதற்கும் லாரிகள் மூலம் பணிகள் நடைபெறும் எல்லாவற்றிலும் மக்கள் பாதிப்பு அடையாத வகையில் அதை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாாிகள் உள்பட அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மக்கள் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை. என்று தொிவித்தார்.

அப்போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கா், பொறியாளர் சரவணன், கவுன்சிலர் எடின்டா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், பகுதி இளைஞரணி ராஜா மற்றும் மணி, அல்பர்ட் உள்பட பலர் உடனிருந்தனர்