December 1, 2025
#அரசியல் #தூத்துக்குடி மாவட்டம் #விளாத்திகுளம்

மக்களவை தேர்தல் விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் முன்னாள் எம்.எல்.ஏ., சின்னப்பன் வாக்களித்தனர்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் மற்றும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் ஆகியோர் வாக்களித்தனர்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் முதல் கட்டமாக நாடு முழுவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை ஏழு மணிக்கு தொடங்கியது. இதில், தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  இராமச்சந்திராபுரத்தில் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ., மார்கண்டேயன் வாக்கினை பதிவு செய்தார்.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ விளாத்திகுளம் கிராமத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., சின்னப்பன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம் டி.என்.டி.டி.ஏ., பள்ளியில் திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் தனது வாக்கினை பதிவு செய்தார்.