தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரிதத்து தூத்துக்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர் பெருமாள்சாமி வாக்கு சேகரித்தார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தூத்துக்குடி -பாளையங்கோட்டை சாலை, ராஜாஜி பூங்கா, தமிழ்ச்சாலை, பால விநாயகர் கோவில் தெரு, தெற்கு சம்பந்தமூர்த்தி தெரு, வி.ஜி.எஸ்., கார்னர், தந்தி ஆபீஸ் ரோடு, பழைய முனிசிபல் ஆபீஸ், உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், தமிழ்நாடு மாநில ஐ.என்.டி.யூ.சி., பொதுச்செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் காங்கிரசார் உதயசூரியன் சின்னத்தில் பொதுமக்களிடமும் விவாக்குகள் சேகரித்தனர்.

வாக்கு சேகரிப்பின் போது., அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன்,
டி.சி.டி.யு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், மண்டலத் தலைவர் தங்கராஜ்,மீனவரணி மிக்கேல் குரூஸ், மாநகர மாவட்ட செயலாளர் இக்னேஷியஸ், பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி,மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி உமா மகேஸ்வரி, மகிளா காங்கிரஸ் மாவட்ட செயலாளர் பேச்சியம்மாள், தனலட்சுமி, கமலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


