தனசேகர் நகர், ஹவுசிங்போர்டு, 4 ஆம் ரயில்வே கேட் பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்புதூத்துக்குடி ஏப்6தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில்தி.மு.க வேட்பாளராக 2வது முறையாக போட்டியிடும் கனிமொழி எம்பியை ஆதரித்து மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி துண்டு பிரசுரம் வழங்கி தினமும் காலை மற்றும் மாலைவேளைகளில் வாக்கு சேகரித்து வருகிறார் 5.4.2024 நேற்று தனசேகர் நகர் பகுதியிலுள்ள கரிசல் இலக்கிய பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார் எட்டயபுரம் சாலை அருகே உள்ள டீக்கடையில் டீ அருந்திவிட்டு அப்பகுதியில் வருபவர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார் ஹவுசிங்போர்டு தனியார் வணிக நிறுவனத்தில் வாக்குகள் சேகரித்துவிட்டு 4வது ரயில்வே கேட் பகுதியிலுள்ள வியாபாரிகளிடம் அரசின்சாதனைகளை எடுத்து கூறி ஓட்டு சேகரித்தார்இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் கீதா முருகேசன் வட்ட கழக செயலாளர் ராஜாமணி 3வது வார்டு உறுப்பினர் ரெங்கசாமி முன்னாள் மாமன்ற உறுப்பினர் இசக்கிமுத்துவட்ட கழக பிரதிநிதி மாரியப்பன் முன்னாள் மாநக உறுப்பினர் பெரியசாமி முன்னாள் வட்ட கழக பிரதிநிதிகண்ணன் முன்னாள் மாநகர விவசாயி அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் முன்னாள் மாநக இளைஞரணி துணை அமைப்பாளர் வேல் பாண்டி போல் பேட்டைதி.மு.க பிரதிநிதி பிரபாகர் இளைஞரணி வேல் முருகன் உட்பட பலர் உடன் சென்றனர்.

