December 1, 2025
#தூத்துக்குடி

செய்தியாளர்களுக்கு குடை: தூத்துக்குடி பிரஸ் கிளப்பின் மழைக்கால பரிசு

தூத்துக்குடி:வடகிழக்கு பருவமழை தூத்துக்குடியில் தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், பணி நேரத்தைக் கருத்தில் கொள்ளாமல் மழையிலும் வெய்யிலும் செய்தி திரட்டும் செய்தியாளர்களின் பாதுகாப்பிற்காக தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் உறுப்பினர்களுக்கு குடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்தித் துறையை “ஜனநாயகத்தின் நான்காவது தூண்” என மதித்து வரும் நிலையில், ஊடகப் பணியாளர்களின் நலனுக்காக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரான கீதாஜீவன் சமீபத்தில் போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட செய்தியாளர்களுக்கு மழைக்கோட்டுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, பிரஸ் கிளப் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக இம்முறை குடைகளையும் வழங்கியது.

பொதுவாக மழைக்காலங்களில் சாலைகளில் நீர்நிலை, போக்குவரத்து சிரமம் போன்றவற்றை மீறி பணி புரியும் செய்தியாளர்களுக்கு இந்த உதவி பயனுள்ளதாக இருக்கும் என நிகழ்வில் பேசப்பட்டு உள்ளது.பிரஸ் கிளப் நிர்வாகம் “செய்தியாளர்களின் பணிப்புரிதல் சமூகத்திற்கான சேவை. அவர்களின் பாதுகாப்பு நமது பொறுப்பு” என தெரிவித்தது.

நிகழ்ச்சியில் பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச்செயலாளர் சதீஸ்குமார், கௌரவ ஆலோசகர்கள் அருண், பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து ஆகியோர் பங்கேற்று, குடைகள் உறுப்பினர்களுக்கு வழங்கினர்.

மேலும் செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், மாரிராஜா, இருதயராஜ், முத்துராமன், ராஜன், லெட்சுமணன், சட்ட ஆலோசகர் சரவணன் மற்றும் உறுப்பினர்கள் முரளிகணேஷ், மாணிக்கம், மாரிமுத்து, நீதிராஜன், ஜெயராம், நடராஜன், அறிவழகன், இசக்கிராஜா, காதர்முகைதீன், கருப்பசாமி, ரவி, அருள்ராஜ், மகாராஜன், சந்தனரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களின் நலனில் அக்கறை செலுத்தும் பிரஸ் கிளப்பின் முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.