December 1, 2025
#தூத்துக்குடி

தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்க முயற்சி — எடப்பாடி மீது கனிமொழி குற்றச்சாட்டு

தூத்துக்குடி:திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் எஸ்.ஐ.ஆர் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தத்தை அவசர அவசரமாக நடத்தும் ஒன்றிய பாஜக அரசையும் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் காங்கிரஸ் சண்முகம், முரளிதரன், முன்னாள் எம்.பி சிப்பிபாறை ரவிசந்திரன், விடுதலை சிறுத்தைகள் ஆட்டோ கணேசன், முருகன், டிலைட்டா ரவி, தமிழக வாழ்வுரிமை கட்சி கிதர் பிஸ்மி, மதிமுக ரமேஷ், முருகபூபதி, ம.நே.ம.க. அகமது இக்பால், ஆஷாத், திராவிடர் கழகம் முனியசாமி, முருகன், சிபிஐ கரும்பன், சிபிஎம் ஆறுமுகம், சமத்துவ மக்கள் கழகம் அற்புதராஜ், இ.முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், மீராசா ம.நீ.ம. ஜவஹர், ஆதிதமிழா் பேரவை முத்துக்குமார், காயல் முருகேசன், ஆதி தமிழா் கட்சி நம்பிராஜ் பாண்டியன், ஊர்காவலன் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது. மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் வரவேற்புரையாற்றினார்.

எஸ்.ஐ.ஆர் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தத்தை அவசரமாக நடத்தும் ஒன்றிய பாஜக அரசையும் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி., “வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்படுவது மிகப் பெரிய அபாயம். பாஜகவின் நோக்கம் வாக்களிக்காத மக்களை விலக்குவது தான். ஹரியானா, பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களில் ஏராளமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் அதே நிலை உருவாகக் கூடாது. ஒருவேளை பெயர் நீக்கப்பட்டால் குடிமக்கள் அடிப்படை உரிமையையே இழக்க நேரிடும். பிஹாரில் 68 லட்சம் வாக்காளர்கள் — இஸ்லாமியர்கள், தலித் மக்கள், பெண்கள் — வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஆதரவு இல்லை என்பதால், இங்கு மக்களின் பெயர்களை நீக்கி தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கான திட்டம் போடப்படுகிறது,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “முதலாளிக்கு நான் தான் சிறந்த அடிமை என்று காட்டிக் கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால் தான் எஸ்.ஐ.ஆர் வேண்டும் என்று வழக்கு போட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கக்கூடிய, அடிப்படை உரிமையை நசுக்கக்கூடிய எஸ்.ஐ.ஆர்-ஐ ஆதரிக்கும் நிலை அதிமுகவிற்கு உள்ளது,” என்றார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ சுடலையாண்டி, தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட அவைத் தலைவர்கள் செல்வராஜ், அருணாச்சலம், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, ஜெயக்குமார் ரூபன், ஜெபதங்கம் பிரேமா, ஆறுமுக பெருமாள், பொருளாளர்கள் ரவீந்திரன், ராமநாதன், மாநில நிர்வாகிகள் புளோரன்ஸ், வசந்தம் ஜெயக்குமார், அன்பழகன், ஜெஸி பொன்ராணி, உமா சங்கர், துணை மேயர் ஜெனிட்டா, நகர்மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மாவட்ட மற்றும் நகர திமுக, கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.