December 1, 2025
#தூத்துக்குடி

எம்ஜிஆர் பூங்கா அருகே குப்பை கொட்டல்; மாநகராட்சிக்கு பாஜக மனு

தூத்துக்குடி மாநகராட்சி மத்திய பகுதி பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ளது உள்ள மைய மயான பூமியில் ஐந்தாவது(5) நுழைவாயிலில் உள்ள கதவுகளை உடைத்து மாநகராட்சி நிர்வாகிகள் குப்பைகளை லாரியில் கொண்டு வந்து கொட்டி வைத்து உள்ளார்கள்.

இதனால் பொதுமக்கள் ஐந்தாவது நுழைவாயிலில் செல்ல முடியாத ஒரு சூழலை ஏற்பட்டுள்ளது.மேலும் இதில் அருகில் தான் எம்ஜிஆர் பார்க் உள்ளது இதில் காலையும் மாலையும் நடைபயிற்சி மற்றும் சிறுவர்கள் விளையாடு வதற்கான பகுதி உள்ளது இந்த குப்பை கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு மட்டுமின்றி நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் இந்த கழிவு குப்பையின் துர்நாற்றத்தை சுவாசிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது

மாநகராட்சி குப்பை கொட்டு சேகரிப்பு மற்றும் அதுசார்ந்த ஒரு தனி இடம் இருந்தும் ஏன் இங்கு குப்பைகள் கொட்டப்படுகிறது.?

இப்பகுதியானது தூத்துக்குடி மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் மழைக்காலம் தொடங்கி விட்டதால் சுகாதாரக் கேடுகள் நிறைய ஏற்பட வாய்ப்புகள் உள்ளது எனவே இதை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன்  உத்திரவின் படி பாஜகவை சேர்ந்த மேற்கு மண்டல தலைவர் லிங்க செல்வம் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் எஸ். பிரியங்க அவர்களிடம் நேரடியாக கோரிக்கை மனு அளித்தனர்

நவம்பர் 2ம் தேதி கல்லறை திருநாள் வருவதால்

அதேபோல் வருகின்ற நவம்பர் 2ம் தேதி கல்லறை திருநாள் வருவதால் உடனடியாக இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு அதற்குரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு குப்பைகளை உடனடியா அகற்ற வேண்டும் கேட்டுக் கொண்டனர்.

இதில் பாஜகவை சேர்ந்த மேற்கு மண்டல தலைவர் லிங்க செல்வம் மேற்கு மண்டல பிரபாரி இசக்கிமுத்து மாவட்ட பிரச்சார பிரிவு பொறுப்பாளர் சொக்கலிங்கம்மண்டல பொது செயலாளர் முருகேசன் , லட்சுமணன் மண்டல பொருளாளர் திரு மணியன் செயலாளர் மகேஸ்வரி ஓபிசி மண்டல் தலைவர் கார்த்திக் தேவ் மற்றும் திருமதி வினாசி சிவகுமார் ஆகிய பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்