தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதியில், அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் 19.10.2025 நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ஏ. பிரான்சிஸ் தலைமையிலும், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பி. சேவுராஜ், தாலுகா ஒருங்கிணைப்பாளர் வி. செல்வராஜ் முன்னிலையிலும், பல மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் சேர்மன் பாபு அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது:
அரசு அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் புகார்களை நேரடியாக பெற்றுக்கொண்டு, அந்த புகார்களை அரசு கண்காணிப்பாளர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும். அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி செயலாளர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்..
அதேபோல் 2031க்குள் தூத்துக்குடி மாவட்டத்தை தமிழகத்தின் முதல் லஞ்சம் இல்லாத மாவட்டமாக மாற்றுவதே எங்கள் நோக்கம். இதற்காக மாவட்டத்தின் ஆறு தாலுகாக்களில் 6,000 உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இனி மாதந்தோறும் தூத்துக்குடி வந்து மக்களிடமிருந்து புகார்கள் பெற்று ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்,” என்றார்
.தீர்மானங்கள்:
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும்.
அரசு அலுவலகங்களில் வெளிப்படையான சேவையை ஊக்குவிக்கும் வகையில் கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.
பொதுமக்களின் புகார்களை பெற மாதாந்திர மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், “2031க்குள் தூத்துக்குடி மாவட்டம் லஞ்சம் இல்லாத மாவட்டமாக மாறி தமிழகத்துக்கு ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும்” என்று உறுதியளித்தனர்.

