December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்ட தலைவர் சித்ராங்கன் தலைமையில் பாஜகவின் தொடர்ச்சியான போராட்டம் வெற்றி – மேல் மருதூர் கால்வாய் திறப்பு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தொடர்ச்சியான போராட்டத்திற்குப் பிறகு இன்று சடையநேரி கால்வாய் திறக்கப்பட்டு, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அமைந்த மேல மருதூர் கால்வாய் தண்ணீர் திறக்கப்பட்டால், அதன் நீர் சடையநேரி கால்வாய் வழியாக உடன்குடி, சாத்தான்குளம், நங்கைமொழி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றடைந்து, அங்குள்ள 10-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு பெரிதும் பயனளித்து வந்தது

ஆனால் பருவமழை தொடங்கியும் சடையநேரி கால்வாய் திறக்கப்படாததால், இன்று சாத்தான்குளம் காந்தி சிலை அருகே தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் சித்ராங்கன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி இதே கோரிக்கைக்காக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அரசு அதிகாரிகள் உடனடியாக கால்வாய் திறக்க உறுதி அளித்ததால், போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

இருப்பினும், நீண்டகாலமாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை ஆகவே இன்று மீண்டும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து அரசு அதிகாரிகள் உடனடியாக கால்வாய் திறக்க உத்தரவிட்டதுடன், கால்வாய் திறக்கப்பட்டது.

600 கன அடி கொள்ளளவு தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது 

இது பாஜகவின் நீண்டநாள் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என மாவட்டத் தலைவர் சித்ராங்கன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர், மாவட்ட துணைத்தலைவர்கள், செயலாளர்கள், மண்டல தலைவர்கள் மற்றும் அணி பிரிவு தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.