November 28, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் சராசரியாக 45.83 மி.மீ. மழை – திருச்செந்தூரில் 154 மி.மீ. கனமழை பதிவாகியது – இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் (அக்டோபர் 15 காலை 6.30 மணி முதல் அக்டோபர் 16 காலை 6.30 மணி வரை) பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 870.80 மில்லிமீட்டர் மழை பதிவாகி, சராசரியாக 45.83 மில்லிமீட்டர் மழை பெய்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில், திருச்செந்தூர் தாலுகாவில் 146 மில்லிமீட்டர், காயல்பட்டினத்தில் 154 மில்லிமீட்டர், சாத்தன்குளத்தில் 84 மில்லிமீட்டர், ஸ்ரீவைகுண்டத்தில் 56.20 மில்லிமீட்டர், ஓட்டப்பிடாரத்தில் 54 மில்லிமீட்டர், தூத்துக்குடியில் 42.80 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

விளாத்திகுளம் மற்றும் கடல்குடி பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது.மாவட்டம் முழுவதும் மழையால் வீடு சேதம், கால்நடை அல்லது மனித உயிர் இழப்பு போன்ற பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதுடன், பல்வேறு பகுதிகளில் நல்ல அளவில் மழை பெய்துள்ளதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாய நிலங்களில் விதைப்பு பணிகள் துவங்கும் நிலையில், இம்மழை பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது

மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக இன்று (அக்டோபர் 16) அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.