திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழா – 2025 அக்டோபர் 22 முதல் நவம்பர் 2 வரை நடைபெற உள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு திருவிழா நாட்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகள் பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
உணவு விற்பனையாளர்கள் மற்றும் உணவு தயாரிப்பாளர்கள் அனைவரும் www.foscos.gov.in இணையதளத்தில் பதிவு செய்து அனுமதி பெற வேண்டும் எனவும், அனுமதியின்றி உணவு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
திருவிழா நாட்களில் உணவுப் பொருட்கள் தரத்தைக் கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் எஸ். காந்திமதி தெரிவித்ததாவது:
திருவிழா நடைபெறும் இடங்களில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமானவையாக இருப்பதை உறுதிசெய்ய திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும், என்றார்.
பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான உணவுகள் சுகாதார முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், குறைபாடுகள் இருந்தால் 0461-2900669 அல்லது 94440 42322 (WhatsApp) என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

