தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டம் 7 ஆம் நாள் சிறப்பு முகாம் முத்தையாபுரம் சாண்டி கல்வியல் கல்லூரியில் நடைபெற்றது.
துறைமுக மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சர்மிளா ஜெனிதா முகாமை தொடங்கி வைத்தார். சாண்டி கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் சாண்டி மற்றும் சாண்டி கல்வியல் கல்லூரி முதல்வர் சத்தியசீலி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
டெங்கு விழிப்புணர்வு பேரணி; முத்தையாபுரம் 53 வது வார்டு கவுன்சிலர் முத்துவேல் தலைமையில் முத்தையாபுரம் பகுதியில் நடத்தப்பட்டது.
என் கடன் பணி செய்து கிடப்பதே
முகாமின் முக்கிய நிகழ்வுகளாக ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற தலைப்பில் ஊக்கமூட்டும் சொற்பொழிவும், சுற்றுப்புறத் தூய்மை செயல்பாடுகள், வேளாண்மை சார்ந்த உயர்கல்வி வழிகாட்டுதல், மரம் நடுதல், சட்டக் கல்வி விழிப்புணர்வு, யோகா பயிற்சி, ஓவியம் மற்றும் கைவினைப் பயிற்சி, தெற்கு மண்டலம் நுண்உரம் செயலாக்க மையம் பார்வை, விளையாட்டு போட்டிகள், டிஜிட்டல் கல்வி மற்றும் சமூகவலைதள விழிப்புணர்வு ஆகியவை இடம்பெற்றன.
போதையில்லா தமிழகம்’
முகாமின் மற்றொரு சிறப்பு நிகழ்வாக ‘போதையில்லா தமிழகம்’ என்ற தலைப்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி முத்தையாபுரம் உதவி காவல் ஆய்வாளர் வடிவேல் தலைமையில் நடத்தப்பட்டது.
நாட்டு நலப்பணித்திட்ட நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சர்மிளா ஜெனிதா, முதுகலை ஆங்கில ஆசிரியர் சரவணன் மற்றும் சாண்டி கல்வியியல் கல்லூரி முதல்வர் சத்தியசீலி கலந்து கொண்டனர்.
7 நாள் முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜலட்சுமி மற்றும் உதவி திட்ட அலுவலர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

