தூத்துக்குடி, செப்.28: பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை (செப்.17) முன்னிட்டு பாஜக தேசிய தலைமை அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் இரண்டு வாரங்கள் சேவை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில், வடக்கு ராதா வீதியில் உள்ள டி.ஏ. திருமண மண்டபத்தில் இன்று (செப்.28) மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம், திரவியம் எலும்பு முறிவு மருத்துவமனை, ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை, பொது மருத்துவம், புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் சிறப்பு பரிசோதனை முகாம் ஆகியவை நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ராஜேஷ் கனி, மகளிரணி மாவட்ட தலைவி வெள்ளைத்தாய், முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் கிழக்கு மண்டல பொறுப்பாளர் சத்தியசீலன், முன்னாள் பொருளாளர் சண்முகசுந்தரம், பாலமுருகன், டாக்டர் அரவிந்த், மாவட்ட செயலாளர் மாசாணம், உஷாதேவி, செல்வி லட்சுமி வேல், ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு, மருத்துவர் அணி மாவட்ட தலைவர் பாலாஜி, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


