December 1, 2025
#தூத்துக்குடி

ஜனசங்கத் தலைவரின் 109வது பிறந்தநாள் விழா – தூத்துக்குடி பாஜகவினர் மலர் தூவி மரியாதை

தூத்துக்குடி: ஜனசங்கத்தின் இரண்டாம் தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மூலம் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் சமூக நலனுக்கான சேவைகள், அரசியல் சாதனைகள் மற்றும் இந்திய சமூக மாற்றத்திற்கு அவர் வழங்கிய பங்களிப்புகளை நினைவுச்செய்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் சிவராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயகிருஷ்ணன், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம், இளைஞரணி மாவட்ட தலைவர் சக்திவேல், மகளிர் அணிமாவட்ட தலைவர் வெள்ளத்தாய், முன்னாள் ஜடிவிங் மாவட்ட தலைவர் காளிராஜா, முன்னாள் விளையாட்டுப் பிரிவு மாவட்ட தலைவர் சேர்ம குருமூர்த்தி, சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கலை செல்வன், சக்தி கேந்திர பொறுப்பாளர் லெட்சுமணன், கிழக்கு மண்டல பொதுச் செயலாளர்கள் சண்முகசுந்தரம் மற்றும் கார்த்தீசன் ராமர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.