December 1, 2025
#ஒட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் கட்டுமான பிளான் அனுமதி தாமதம்: பொதுமக்கள் கேள்வி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில், கட்டுமான அனுமதி பெறும் பொழுது ஊராட்சி செயலர்கள் லஞ்சம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார்.  அனுமதி தாமதமாக வழங்கப்படுவதால், மக்கள் பெரும் வேதனையில் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற செயலர்கள் கடைகள் மற்றும் குடோன்கள் பிளான் அப்ரூவல் வாங்க தற்போது  ஆன்லைன் மூலமாக  கட்டுமான அனுமதியை பெற வேண்டும் மேற்படி அதற்கான  ஆவணங்களை சரியாக சமர்பித்து கட்டி வரை படங்களை பதிவேற்றம் செய்த பிறகு, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார அலுவலர் பார்வைக்கு அனுமதி பெறும் நடவடிக்கை நடைபெறுகிறது. ஆனால் கட்டுமானம் கட்டுவதற்கு வரைபட அனுமதி  உடனே வழங்க வேண்டும்  என தமிழக அரசு அறிவித்துள்ளது ஆனால் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களால் காலம் தாழ்த்தப்படுகிறது இதனால் தொழில் முனைவோர் வங்கியில் லோன் எடுப்பதற்கு மற்றும் மின்சாரப் பெறுவதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர் 

 இது குறித்து பொதுமக்கள் தெரிவிப்பது அனுமதியை வழங்கும் முன், பிளான் பரப்பளவுக்கு ஏற்ப ஊராட்சி செயலர்கள் லஞ்சம் தொகையை கணக்கிட்டு, ஆரம்ப நிலை ரூ. 10,000 முதல் 1 லட்சம் வரை வசூலிக்கின்றனர். இதனால்,  கடை  கட்டும் ( கமர்சியல் பிளான்)அப்ரூவல் வாங்க மக்களுக்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரு கிராம ஊராட்சியில் அதிக லஞ்சம் கேட்டு ஊராட்சி செயலர் பிளான் அனுமதி வழங்க மறுத்தார். ஆனால், குடோனை கட்டும் நபர் எந்த லஞ்சமும் வழங்க முடியாது என்று உறுதியாக கூறியதால்,  கட்டுமான அனுமதி பெறுவதற்கு  அதிகாரிகள் காலம் தாமதம்  செய்து பின்னர் வழங்கப்பட்டது. இந்த தாமதம், பொதுமக்களுக்கு மற்றும் புதிதாக  சிறு தொழில் முனைவோர்கள் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் தற்போது ஒரு சில ஊராட்சி மன்ற செயலர்கள் வேண்டுமென்றே காலதாமதம் செய்கின்றனர் இந்த பிளான் அப்ரூவல் ஆகவேண்டும் என்றால் மேல் அதிகாரியை கவணிக்க வேண்டும் என்று  ஊராட்சி மன்ற செயலாளர் தெரிவிக்கின்றனர் 

மற்றுமொரு கோணத்தில், தமிழக அரசு சிறு தொழில் மற்றும் தொழிற்சாலைகளை மேம்படுத்தும் திட்டங்களை ஊக்குவிப்பு செய்கிறது. ஆனால், அதிகாரிகள் அனுமதி வழங்குவதில் அலட்சியம் காட்டுவதால், பொதுமக்கள் கால தாமதத்தினால் பாதிக்கப்படுகின்றனர். 

பொதுமக்கள், ஊராட்சி அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் செயற்பாடுகளினால் மக்கள் பெரும் வேதனை மற்றும் ஏமாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் அதிகாரிகளின் மீது நம்பிக்கை குறைவாகியுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.