December 1, 2025
#தூத்துக்குடி

கல்வி, பொதுஅறிவால் வாழ்க்கையில் சாதிக்கலாம்: அமைச்சர் கீதாஜீவன்

கல்வியும் பொதுஅறிவையும் வளர்த்து கொண்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம்
தூத்துக்குடி கல்லூாி விழாவில் அமைச்சா் கீதாஜீவன்  அறிவுரை

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 50வது ஆண்டு பொன்விழாயை யொட்டி தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி நன்றி திருப்பலியினை மேற்கொண்டார்.
பொன்விழா நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலத்துறை மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்து பேசுகையில் பள்ளி பருவத்தில் நாம் கற்றுக்கொண்ட நல் ஓழுக்கமும் கல்லூாியின் படிப்பும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடமாகவும் அமைகிறது. ஆரம்பம் முதல் கடைசி வரை அனைத்து புத்தகங்களையும் முழுமையாக படித்து கல்வி அறிவையும் பொது அறிவையும் வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம். படிக்கும் காலத்திலேயே அடுத்த இலக்கு என்ன என்பதை முடிவு செய்து முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டும். என்று பேசினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் மதுரை மாகாண தலைவி முனைவர் ஜாக்லின் பிரகாசம் ஆசீர்வாதங்களும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் உரையும் இடம் பெற்றன. பொன்விழா கொண்டாட்டத்தில் கல்லூரிக்கு உதவிய புகழ்பெற்ற பங்களிப்பாளர்களை பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. பொன்விழாவினை முன்னிட்டு நடைபெற்ற ஆரோக்கியம் ஒற்றுமை மற்றும் இளைஞர் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் ரொக்க பரிசாக முதல் பரிசு 5000 இரண்டாம் பரிசு 3000 மூன்றாம் பரிசு 1500 வழங்கப்பட்டன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியில் இடம் பெற்ற மதிப்பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருநெல்வேலி வணிகர் சங்கத்தின் அதிபர் மைக்கேல் ராஜேஷ், கல்லூரியின் செயலாளர் முனைவர் ரோசாலி, முதல்வர் ரூபா, துணை முதல்வர் மதுரவல்லி மற்றும் ஆசிாியா்கள் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.