தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், குளத்தூர் ஊராட்சியில் 15-வது நிதி குழு மானியத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான நிதியியல் இருந்து 600000/-
ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இரு கிராம மக்களுக்கு குளியல் தொட்டி வசதி செய்து கொடுத்தார் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபாண்டி
அதில் ஒன்று ஈ.சி. ஆர். சாலையின் வழியே அமைந்துள்ள தெற்கு கண்மாய் கரையில். 600000/- ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குளியல் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது.
இந்த குளியல் தொட்டி இந்த பகுதியில் வாழும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது வந்தது.
அவர்களின் கோரிக்கையின் படி குளியல் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு 12.7.2024 வழங்கப்பட்டது
அதேபோல் குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இராமநாதபுரம் கிராமத்தில் கண்மாய் கரையில் இடத்தில் 14-வது நிதிக்குழு மானியத்தில் 2020-2021ஆம் ஆண்டுக்கான பணிகளில் இருந்தது ஆறு லட்சம் மதிப்பீட்டில் குளியல் தொட்டி கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கபட்டது.

மேலும் இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபாண்டி துணை தலைவர் மாரி செல்வி பாலமுருகன் சண்முகநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

