December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் 5வது புத்தக திருவிழா- 3வது நெய்தல் கலைத் திருவிழா வரும் அக்டோபர் மாதம் துவங்குகிறது; முன்னேற்பாடு பணிகளை கனிமொழி எம்.பி, ஆய்வு செய்தார்

தூத்துக்குடி எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி விலக்கு பகுதியிலுள்ள திடலில்

ஐந்தாவது புத்தகத் திருவிழா வருகின்ற அக்.3 முதல் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.அதை தொடர்ந்து நெய்தல் கலைத் திருவிழா வரும் அக்டோபர் 11ம் தேதி முதல்- 13ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, உதவி காவல் கண்காணிப்பாளர் மதன் ஆகியோர் உடன் சென்றனர்.

தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் 3-வது நெய்தல் கலைத் திருவிழா வரும் அக்டோபர் 11ம் தேதி முதல் அக்டோபர் 13ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. மேலும், வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் அக்டோபர் 13ம் தேதி வரை 5-வது புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது, புத்தகக் கண்காட்சியுடன் இணைந்து புகைப்பட கண்காட்சியும் நடைபெறும்.

நெய்தல் கலைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும்- மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இந்த விழா அக்டோபர் 11ம் தேதி முதல் அக்டோபர் 13ம் தேதி வரை மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், ஜிம்பளா மேளம், பொய்க்கால் குதிரை, கிராமிய நிகழ்ச்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தூத்துக்குடியின் சிறப்பு உணவுகளுடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் 40க்கும் மேற்பட்ட அரங்குகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

புத்தகக் காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளன. புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தினமும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் பங்குபெறும் சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பிரபல ஏழுத்தாளர்களை மற்றும் பேச்சர்களை சிறப்பிக்க உள்ளனர். மேலும், மாலை பொழுதில் பள்ளி மாணவர்களை அரசின் பேருந்தில் அழைத்து வந்து புத்தக கண்காட்சியினை காண்பிக்க உள்ளனர்.

புகைப்பட கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் கண்காட்சியாக வைப்பதற்குத் தனியாக அரங்கம் அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, மதத் திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மக்கள் வாழ்க்கை முறை, மீனவ சமூகத்தின் வாழ்க்கை, தூத்துக்குடி இயற்கைக் காட்சிகள் (கடற் பரப்புக்கள் நதிக் காட்சிகள். ஈர நிலங்கள், நகர்ப்புற காட்சிகள்) வனவிலங்குகள் மற்றும் ஈரநில பறவைகள், தொழிலாளர்கள் (தொழில்துறை. மீன்பிடித்தல்), விளையாட்டு போன்ற புகைப்படங்கள் இடம்பெறவுள்ளன.

 

இப்புகைப்படப் போட்டியானது இரண்டு பிரிவுகளின் கீழ் நடத்தப்படும், போட்டியில் கலந்துகொள்ள 18 வயது வரையிலான நபர்கள் ஒரு பிரிவாகவும்,18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் ஒரு பிரிவாகவும் என இரண்டு பிரிவுகளின் கீழ் போட்டியில் கலந்துகொள்ளலாம். ஒவ்வொரு பிரிவிலும் மிகச்சிறந்ததாகத் தெரிவு செய்யப்படும் புகைப்படம் புத்தகக் கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும், பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்படும்.

இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தெரிவு செய்யப்படும் மிகச்சிறந்த புகைப்படத்திற்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 10 புகைப்படங்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும். 5அவது புத்தகக் கண்காட்சியில் இடம்பெறவுள்ள “புகைப்பட போட்டி – 2024” க்கு செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை, புகைப்படம் எடுத்து & அனுப்ப வேண்டிய இணைப்பு https://Thoothukudicorporation.com/pc

ஐ திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி அறிமுகப்படுத்தினார்.