December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டு பகுதிகளிலும் மக்களின் குறைகள் முழுமையாக தீர்த்து வைக்கப்படும். மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையிலும் ஓரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் பழைய நகராட்சி வளாகத்தில் உள்ள கிழக்கு மண்டல குறைதீர்க்க்கும் முகாமிற்கு மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமை வகித்தார். துணை மேயர் ஜெனிட்டா, கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
முகாமை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க இந்த முகாம் நடைபெறுகிறது.

ஏற்கனவே பொதுமக்கள் மாநகராட்சி இணையதளத்தில் தங்களது பதிவுகளை பதிவு செய்து வருகின்றன. அதை முறையாக பார்வையிட்டு அந்த பணிகளும் ஓரு புறம் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் இந்த குறைதீர்க்கும் முகாமில் பெயர் மாற்றம் முகவாி மாற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் போன்றவைக்கு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது அதனடிப்படையில் வடக்கு மண்டலத்தில் பெறப்பட்ட 97 மனுக்களில் மறுநாளே 15 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது அதே போல் மேற்குமண்டலத்தில் பெறப்பட்ட 128 மனுக்களில் மறுநாளே 48 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
இந்த முகாமில் கொடுக்கப்படும் ஓவ்வொரு மனுக்களையும் முறையாக பதிவு செய்து அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாநகராட்சி நிா்வாகம் பொறுப்பேற்ற பின் முத்துநகா் கடற்கரை பல்வேற மக்கள் பலனடையும் வகையில் பாராமாிக்கப்பட்டது மட்டுமின்றி மாற்றத்திறனாளிகள் பயனடையும் வகையில் சருக்கு தளம் அமைக்கப்பட்டு பயனடைந்து வருகின்றன.
அதே போல் ரோச் பூங்காவும் பராமாிப்பு செய்யப்பட்டு மக்கள் பயனடைந்து வருகின்றன. இதுவரை மாநகராட்சி பகுதியில் 2000 புதிய தாா் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. வடிகால் பணிகள் புதிதாக கட்டப்பட்டு 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. ஐந்து சதவீதம் பணிகள் மட்டுமே உள்ளது. இந்த பணிகளும் விரைவில் முடிக்கப்படும்.
மேலும் கடற்கரை சாலையில் ஓரு புறம்மட்டும் இருந்து மின்விளக்குகள் தற்போது இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள. சில பகுதிகளில் தேவையில்லாத மணல் குவியல்கள் அதிகமாக இருப்பதால் அதில் அந்த பகுதியில் பேவர்ப்ளாக் சாலைகள் அமைக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்.
தற்போது மாநகராட்சி முழுவதும் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது என்று புகார்கள் வந்துள்ளன. ஏற்கனவே மாநகராட்சி சார்பில் 5500 நாய்களுக்கு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் பல வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களும் சேர்ந்து தெருவில் சுற்றுவதால் நாய்களை பிடிப்பதில் சற்று சிரமம் ஏற்படுகிறது. இதனால் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மாநகராட்சியில் பதிவு செய்து சான்றிதழ் வாங்கிக் கொள்ள வேண்டும். அது இல்லாத நாய்களை எந்த முறையில் அதற்கு தீர்வு காணலாம் என்பதை குறித்து விாிவான ஆலோசனைகளை மேற்கொண்டு அந்த குறைகளும் தீர்த்து வைக்கப்படும். வியாபாாிகளின் விருப்பத்திற்கேற்ப ஜெயராஜ் சாலை விவிடி ரோடு பகுதிகளில் இருபுறமும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே இருக்க கூடிய சில ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக கண்டறிந்து மீட்கப்படும். சில பகுதிகளில் ஹைமாக்ஸ் லைட் தேவையான இடங்களில் அமைக்கப்படும் என்றார்.
முகாமில் சொத்து வரி நிர்ணயம், சொத்துரி பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு,தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை, பிறப்பு இறப்பு சான்று மற்றும் திருத்தங்கள் உள்ளிட்ட மாநகராட்சி சேவைகள் குறித்து கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.
மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அவைத்தலைவர் தங்கமாாியப்பன் அளித்த கோாிக்கை மனுவில் சண்முகபுரம் பிராப்பர் உள்ளிட்ட பகுதிகளில் குடிதண்ணீர் குழாய் பதிப்பதற்கு தோண்டப்பட்டு முடியதில் சாலை மிகவும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. அதை உடனடியாக சாிசெய்து தரவேண்டும். என்று கோாிக்கை மனு அளித்தார். தேசிய உழைப்பாளர்கள் மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் சுரேஷ் பா்னாந்து உள்பட பலர் கோாிக்ைக மனு அளித்தனர்.
நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல உதவி ஆணையர் சொர்ணலதா, நகர அமைப்பு செயற்பொறியாளர் ரங்கநாதன், துணை பொறியாளர் முனீர் அகமது, பொறியாளர் சரவணன், நகர் நல அலுவலர் வினோத் ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், இளநிலை பொறியாளர் செல்வம், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் ஜான்சிராணி, ரெக்ஸின், எடிண்டா, மரியகீதா, ராமு அம்மாள், சரண்யா, ரிக்டா, மும்தாஜ், மகேஸ்வரி, பேபி ஏஞ்சலின், தனலட்சுமி, மெட்டில்டா, முன்னாள் கவுன்சிலர்கள் அருள், இசபெல்லா, ஆனந்தராஜ், செல்லப்பா, எட்வின்பாண்டியன், மாநகர நெசவாளர் அணி தலைவர் சீதாராமன், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், வட்ட செயலாளர்கள் கதிரேசன், பொன்ராஜ், முன்னாள் வட்டச்செயலாளர்கள் ஹாட்லி, மாாியப்பன், உள்பட பொதுமக்கள் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.