December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

ஏ.என்.டி அறக்கட்டளையின் நாற்பத்து மூன்றாவது இலவச மருத்துவ முகாம்.

விருதுநகர் மாவட்டம், மலைப்பட்டி தி.கஸ்தூரியம்மாள் அவர்களின் நினைவினை போற்றும் வகையில் இதுவரை நாற்பத்திமூன்று மருத்துவமுகாம்கள் மற்றும் முப்பத்திமூன்று கல்வி நிறுவனங்களில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்கள் போன்ற மருத்துவ பணிகளை செய்து வரும் எமது ஏ.என்.டி. கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை எவ்வித பிரதிபலனுமின்றி சமூக அக்கறையுடன் அனைத்துவித மக்களும் பயனுரும் வகையில் மருத்துவ, கல்வி மற்றும் சமூக பணிகளை செய்து வருகிறது.

அந்த நோக்கின் பகுதியாக சமூக பணிகளின் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டம், மலைப்பட்டி தி.கஸ்தூரியம்மாள் அவர்களின் நினைவினை போற்றும் வகையில் ஏ.என்.டி கல்வி, மருத்துவ மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை மதுரை அமெரிக்கன் கல்லூரியுடன் இணைந்து அந்த கல்லூரி மாணவமாணவியரின் குடும்ப உறுப்பினர்களுக்காக (குறிப்பாக முதியவர்களுக்காக) இலவச இருதயம், கண், காது மற்றும் நுரையீரல் ஆகியவற்றிற்கான பரிசோதனை முகாமினை நடத்தியது.

27/07/2024 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அமெரிக்கன் கல்லூரி பிரதான கருத்தரங்கு கூடத்தில் (மெயின் ஹாலில்) ஏ.என்.டி கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவர் பேரா.டாக்டர்.தி.ஜெயராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமினில் மதுரை கே.ஆர்.எஸ் நியூ லைப் மருத்துவமனை சார்பில் இ.சி.ஜி இருதய பரிசோதனை, மதுரை ராக்ஸ் மருத்துவமனை சார்பில் நுரையீரல் பரிசோதனை, வாசன் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை மற்றும் மதுரை சவுண்ட்ஸ் குட் சார்பில் இலவச செவி திறன் பரிசோதனை & மருத்துவ ஆலோசனை முழுவதும் இலவசமாக வழங்கப்பட்டன.
திருவனந்தபுரம் டாக்டர் சோமெர்வெல் நினைவு மருத்துவ மேலாண்மைக் கல்லூரியின் முதல்வரும் ஏ.என்.டி கல்வி,மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவருமான பேரா.டாக்டர்.தி.ஜெயராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமினை மதுரை காமராசர் பல்கலைக்கழக தொழில் முனைவியல் துறை தலைவர் பேரா.டாக்டர்.M.சிவகுமார் துவக்கி வைத்தார். முகாமின் தலைமை புரவலரும் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் பொருளாளர் (பர்சார்) டாக்டர்.M.பியூலா ரூபி கமலம் முன்னிலை வகித்தார்.
ஏ.என்.டி. அறக்கட்டளையின் பொருளாளர் திரு.திருவேங்கடராமனுஜம், ஏ.என்.டி. அறக்கட்டளையின் செயலாளர் திருமதி.பாண்டிச்செல்வி, திரு.கரண்.சி, திரு.அகிலன்.ஜெ; சேவை கற்றல் திட்ட இணை (அசோசியேட்) டாக்டர்.C.ஜேம்ஸ்லின் வித்யா, திட்ட தலைவர் டாக்டர்.சுனிதா எவ்லின் கிறிஸ்டி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.S.T.ஜேக்கப் பொன்ராஜ் ஆகியோர் இம்மருத்துவமுகாமினை ஒருங்கிணைத்திருந்தனர்.

கே.ஆர்.எஸ் நியூ லைப் மற்றும் ராக்ஸ் மருத்துவமனைகளின் சார்பில் அதன் நிர்வாக அதிகாரி ராம்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் இ.சி.ஜி மற்றும் நுரையீரல் செயல்திறன் பரிசோதனைகளை செய்தனர். வாசன் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் இலவச கண் பரிசோதனைகளை செய்தனர். சவுண்ட்ஸ் குட் ஹியரிங் கேர் மருத்துவ குழுவினர் இலவச செவி திறன் பரிசோதனைகளை செய்தனர். 413 பேர் (இருதயம் 132 பேர், நுரையீரல் 102 பேர், காது 67 பேர், கண் 112 பேர்) பரிசோதனைகளை இலவசமாக செய்து மருத்துவர்கள் ஆலோசனைகளை பெற்று பயனடைந்தனர்.

இம்முகாமினில் ஏ.என்.டி. அறக்கட்டளையை சார்ந்த நிவேதா, ராகுல். சாந்தகுமார். மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.