December 1, 2025
#அரசியல் #செய்தி

3-வது கட்ட தேர்தல் தொகுதிகளில் விறுவிறு வாக்குப் பதிவு,

டெல்லி: 18-வது லோக்சபா தேர்தலில் 3-வது கட்டமாக 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மொத்தம் 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 93 தொகுதிகளில் 1331 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பிரகலாத் ஜோஷி, முன்னாள் முதல்வர்கள் சிவராஜ் சிங் சவுகான், பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர், திக்விஜய் சிங் உள்ளிட்டோர் இன்றைய தேர்தலை எதிர்கொள்கின்றனர்.

18-வது லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. 3-வது கட்ட தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது