CN. அண்ணாதுரை
தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 19.02.25 இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார், துணை மேயர் செ.ஜெனிட்டா, துணை ஆணையர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில்;
மாநகராட்சி பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்க்கிணங்க பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் வாரந்தோறும் நடைபெறுகிறது. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் பெறப்படும் மனுக்களில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் போன்ற பல்வேறு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 1634 மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலத்தில் மட்டும் 439 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாநகராட்சி பகுதிகளில் 2500 சாலைகள் போடப்பட்டுள்ளது, 80 சதவீத வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் மக்களின் உடல் ஆரோக்கியம் காக்கவும், மன அமைதியை ஏற்படுத்தவும் நடைபயிற்சி தளம், உடற்பயிற்சி கூட்டத்துடன் பசுமை பூங்காக்கள் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 206 பூங்காவுக்கான இடங்களில் பென்சிங் அமைக்கப்பட்டு செடிகள் வளர்க்கப் படுகின்றன. இந்த பூங்காக்களில் இளைஞர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க விளையாட்டு உபகரணங்களுடன் விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் சாலையோர வியாபாரிகள் கண்டறியப்பட்டு இதுவரை 6800 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் தொழில் மேம்பாட்டுக்காக 6300 பேருக்கு தொழில் கடன் இரண்டு கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள் விற்பனை செய்யும் சாலையோர வியாபாரிகளுக்கு தரமான பொருட்களை தயாரித்து பொது மக்களுக்கு விற்பனை செய்வது குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தியுள்ளோம். மேலும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் கிளாஸ்களை ஒழிப்பதில் மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு பிளாஸ்டிக் கேரி பேக்குகளை ஒழிக்க ஒத்துழைத்து தூத்துக்குடி மாநகராட்சியை பசுமை மாநகராட்சியாக உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டார்.
முகாமில் பொதுமக்களிடமிருந்து 33 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் ஏழு மனுகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு அதற்கான தீர்வாணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர் ராமச்சந்திரன், நகர உதவி பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் வெங்கட்ராமன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார் எம்.சி, மாமன்ற உறுப்பினர்கள் பேபி ஏஞ்சலின், ரெக்ஸிலின், எடிண்டா, மரிய கீதா, தனலெட்சுமி, ராமு அம்மாள், மகேஸ்வரி, மும்தாஜ் மற்றும் திமுக வட்டச் செயலாளர் பொன்ராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஜோஸ்பர் உள்பட அலுவலர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.