November 30, 2025
#Columnist/கட்டுரையாளர்

2025-ரயில்வே பட்ஜெட் : மாநில வாரியாக நிதி ஒதுக்கீடு – அதிகபட்ச தொகை பெற்ற மாநிலம் எது .?

இந்திய ரயில்வே பட்ஜெட் 2025, ரயில்வே பட்ஜெட் நிதி ஒதுக்கீடு:

இந்திய ரயில்வே (IR) 2025-26 மத்திய பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவிலான ரூ.2,65,200 கோடி ஒதுக்கீட்டை பெற்றுள்ளது.

பிப்ரவரி -03, (திங்கள்) அன்று, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ரயில்வே பட்ஜெட்டின் மாநில வாரியான நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார்.

மேலும் இந்திய ரயில்வே, பயணிகள் பாதுகாப்பை அதிகரிப்பதில் முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ளது.

மற்றொரு  சிறப்பம்சம்”கவச்” எனப்படும் தானியங்கித் தொடர்வண்டி பாதுகாப்பு அமைப்பை (ATP) செயல்படுத்துவது, ரயில் நிலையங்களை மேம்படுத்துவது, மற்றும் மிக பின்தங்கிய,  ரயில் செல்லாத பகுதிகளுக்கும் ரயில்வே வழித்தடங்கள் மற்றும் ரயில்வே நிலையம் அமைத்து விரிவுபடுத்துவது போன்ற வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

மத்திய பட்ஜெட் 2025-26, ரயில்வே பட்ஜெட் மாநில வாரியான ஒதுக்கீடு:

மாநிலங்களில், முதன்மை இடம்

மகாராஷ்டிரா ரூ.23,778 கோடி ஒதுக்கீடுடன் மிக அதிக நிதியை பெற்றுள்ளது. அதன் பின்னர், உத்தரப்பிரதேசம் (ரூ.19,858 கோடி), குஜராத் (ரூ.17,155 கோடி), மேற்குப் வங்காளம் (ரூ.13,955 கோடி) ஆகியவை வருகின்றன. அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.10,440 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜம்மு & காஷ்மீருக்கு 2025-26 நிதியாண்டில் ரூ.844 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • ஆந்திரப் பிரதேசம் – ரூ. 9417 கோடி
  • பீகார் – ரூ. 10066 கோடி
  • சத்தீஸ்கர் – ரூ. 6925 கோடி
  • தில்லி – ரூ. 2593 கோடி
  • கோவா – ரூ. 482 கோடி
  • ஹரியானா – ரூ. 3416 கோடி
  • ஹிமாச்சலப் பிரதேசம் – ரூ. 2716 கோடி
  • ஜார்கண்ட் – ரூ. 7302 கோடி
  • கர்நாடகா – ரூ. 7559 கோடி
  • கேரளா – ரூ. 3042 கோடி
  • மத்தியப் பிரதேசம் – ரூ. 14745 கோடி
  • ஒடிசா – ரூ. 10559 கோடி
  • பஞ்சாப் – ரூ. 5421 கோடி
  • ராஜஸ்தான் – ரூ. 9960 கோடி
  • தமிழ்நாடு – ரூ. 6626 கோடி
  • தெலுங்கானா – ரூ. 5337 கோடி
  • உத்தரகாண்ட் –ரூ. 4641 கோடி

தொழில் வளம் பொருந்திய தமிழ் நாடு பெற்ற  தொகை குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.