December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

1000 புதிய குடிநீர் இணைப்புகள் மாநகராட்சி பகுதியில் வழங்க பட்டுள்ளது குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களிலும் பொதுமக்கள் குறைகள் தீர்க்கும் முகாம் நடைபெறும் என்று கடந்த 28ம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பொியசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி ஸ்டேட் பேங்க காலணியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் இப்பகுதிக்குட்பட்ட ஓன்று முதல் 14வரை மற்றும் 20-வது வார்டு என 15- வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசிய தேவையான வீட்டுத்தீர்வை தண்ணீர் தீர்வை பெயர்மாற்றம் அதிலும் முக்கியமாக புதிய கட்டிட அனுமதி உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்களின் குறைகள் தீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். ஆனையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேயர் ஜெகன் பொியசாமி முகாமை தொடங்கி வைத்து பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி 27 மாதங்களாக மாநகராட்சி பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம். நான் பொறுப்பேற்ற பின் 3 ஆணையர்கள் வந்துள்ளனர்.

அதில் ஓவ்வொரு ஆணையருக்கும் ஓவ்வொரு வகையான திட்டங்களோடு பணியாற்றினோம் தற்போது உள்ள ஆணையர் புதுமையான திட்டங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு பணியாற்றி வருகிறார். ஆன்லைன் மூலம் புகார்கள் கருத்துக்கள் தொிவிக்கப்பட்டும் தகவல்களில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக வந்துள்ளது. நான்கு மண்டலத்திற்கும் உதவி ஆணையர்கள் இருந்து பணியாற்றினாலும் மக்களை தேடி முதல்வர் ஸ்டாலின் என்ற திட்டம் கடந்த ஆண்டே நடைபெற்றது. இப்போது மண்டலம் வாாியாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு ஓரு மாதத்தில் நான்க வாரங்கள் ஓவ்வொரு மண்டலத்திற்கும் புதன்கிழமை தோறும் மக்களை நேரடியாக சந்தித்து பெறப்படும் மனுக்களுக்கு ஓரு மாதத்தில் முழுமையாக தீர்வு காணப்படும்.

தமிழகத்தில் பொதுமக்கள் எளிதாக பயன்பெறும் வகையில்   2500 சதுர அடி நிலத்தில் 3500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கு இனி கட்டட அனுமதி பெற தேவையில்லை என ஏற்கெனவே முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி 3500 சதுர அடி வரை புதிய கட்டிடங்கள் கட்ட சலுகை வழங்கியுள்ளது. அதற்கு மேல் வரும் சதுர அடிக்கு தான் நாங்கள் அனுமதி கொடுக்க வேண்டியுள்ளது.

நான்கு உதவிய ஆணையர்கள் பணியாற்றினாலும் சில பணிகளை ஆணையர் கவனத்திற்கு வந்த பின் அதற்கு முடிவு பெறும் நிலை உள்ளது. மாநகர பகுதியில் 2000 புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளன. 15 பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கென்று ஓரு தனி பூங்காவும் உள்ளது. மாநகரம் முழுவதும் மொத்தம் 153 பூங்காக்கள் அமையவுள்ளது.எல்லா பகுதிகளுக்கும் அது வரப்பிரசாதமாக அமையும். ஏற்கனவே முதலமைச்சர் பிறந்தநாளை யொட்டி தருவைகுளம் குப்பை கிடங்கு பகுதியில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 60 வது வார்டுகளிலும் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்போது அது செடியாகத்தான் தொியும் வளர்ந்த பின் அதனுடைய நன்மைகள் என்னவென்று நமக்கு புாியும். கால்வாய் மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மண்டலம் பகுதியில்தான் புதிய கட்டுமான பணிகளுக்கு அதிகமான கட்டிட அனுமதிக்கான கோாிக்கைகள் வரப்பெற்றுள்ளன. தெற்கு‌, மேற்கு பகுதியில் குறைவாகவுள்ளன, மாநகராட்சி பகுதியில் குடியிருப்பவர்களுக்கு எந்த விதமான தீர்வைகள் இல்லாவிட்டாலும் மாநகராட்சியில் இடைத்தரகர்கள் இன்றி பணம் செலுத்தும் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு உடனடியாக குடிதண்ணீர் இணைப்பு வழங்கப்படும் இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் 15 வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் வாி உயர்வு, பெயர்மாற்றம் இடத்திற்கான அனுமதி என பல்வேறு வகையான கோாிக்கை மனுக்களை வழங்கினார்கள்.

முத்தமாள்காலணி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் தங்கராஜ், வீட்டுவசதி வாரியம நலச்சங்க இணைச்செயலாளர் ஜெயபாலன், மச்சாது நகர் நலச்சங்க தலைவர் கிருஷ்ணன், திரேஸ்புரம் நாட்டுப்படகு பஞ்சாயத்து செயலாளர் ராபர்ட், தங்களது பகுதிகளுக்கு நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து கோாிக்கை மனு வழங்கினார்கள். மதிமுக மாநில இலக்கிய அணி துணைச்செயலாளர் மகாராஜன், மாநில வௌியீட்டு அணி செயலாளர் நக்கீரன், மாவட்ட பிரதிநிதி பொன்ராஜ், ஆகியோர் அளித்த மனுவில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர உணவகங்களில் கடைகள் பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கழிவு நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஓடுவதற்கு தடையாக இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் முழுமையாக தடை செய்ய வேண்டும். என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.
நிகழ்ச்சியில் இணை ஆணையர் ராஜாராம், செயற்பொறியாளர் பாஸ்கா், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிாின்ஸ் ராஜேந்திரன், ஸ்மார்ட் சிட்டி திட்ட பொறியாளர்கள் ராமசந்திரன், ரெங்கநாதன், நகர்நல அலுவலர் டாக்டர் தினேஷ், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் காந்திமதி, சுப்புலட்சுமி, ரெங்கசாமி, நாகேஸ்வாி, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், பவாணி, சுதா, கற்பகக்கனி, ஜாக்குலின்ஜெயா, கீதாமுருகேசன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், பூபேஸ், பகுதி செயலாளர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், வட்டச்செயலாளர் தெய்வேந்திரன், வட்டப்பிரதிநிதிகள் அருணகிாி, கண்ணன், லயன்ராஜன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜோஸ்பா், உள்பட மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மனுகொடுக்க வந்த மக்களில் பெரும்பாலோர் கட்டிட அனுமதிக்கான பத்திரம் மற்றும் பிளானுடன் கொண்டு வந்து ஆணையர் மேயாிடம் காண்பித்து கோாிக்கையாக மனு அளித்தனர். இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் பொிதும் பலனடையும் வகையில் அமைந்துள்ளது. இந்த பகுதிக்குட்பட்ட 10வது வார்டு அதிமுக கவுன்சிலர் பத்மாவதி கலந்து கொள்ளவில்லை. முன்னாள் தாசில்தார் ஓருவரும் தங்களது கோாிக்கையை மனுவாக வாிசையில் சென்று கொடுத்தார். எல்லா மனுக்களுக்கும் ஓப்புகை சீட்டு வழங்கப்பட்டு பதிவேட்டில் பதிவு செய்து கொண்டனர்.