By,CN. அண்ணாதுரை
தூத்துக்குடி,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் சந்தை விலையில் இருந்து 75% குறைவான விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் முதல்வர் மருந்தகங்களை தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் மருந்தகங்களை காணொளிகாட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.02.2025) கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 “முதல்வர் மருந்தகங்களை” காணொலி வாயிலாக திறந்து வைத்து பேருரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதல்வர் மருந்தகத்தினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 11 முதல்வர் மருந்தகங்களும். தனியார் தொழில் முனைவோர் மூலம் 09 மருந்தகங்களும் என மொத்தம் 20 மருந்தகங்கள் தொடங்கப் பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியமாக ரூ.3.00 இலட்சம் வழங்கப்படுகிறது. இதில் ரொக்கமாக ரூ.150 இலட்சம் முதல்வர் மருந்தகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர் சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவுவதற்கு வழங்கப்படுகிறது. மேலும் ரூ.1.50 இலட்சம் மதிப்பிற்கு மருந்துகள் வழங்கப்படுகிறது.
முதல்வர் மருந்தகம் அமைக்கும் கூட்டுறவு சங்கத்திற்கு அரசு மானியமாக ரூ.2.00 இலட்சம் வழங்கப்படுகிறது. இதில் ரொக்கமாக ரூ.100 இலட்சம் முதல்வர் மருந்தகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர் சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவுவதற்கு வழங்கப்படுகிறது. மேலும் ரூ.1.00 இலட்சம் மதிப்பிற்கு மருந்துகள் வழங்கப்படுகிறது. முதல்வர் மருந்தகம் அமைக்கும் 11 கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.11.00 இலட்சமும், 9 தொழில் முனைவோர்களுக்கு ரூ.13.50 இலட்சம் என மொத்தம் ரூ.24.50 இலட்சம் அரசு மாணியமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் (TNMSC) மூலம் ஜௌரில் மருந்துகள் கொள்முதல் செய்தும். இதர மருந்துகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு (TNCCF) மூலம் கொள்முதல் செய்தும் இம்முதல்வர் மருந்தகங்களுக்கு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உயிர்காக்கும் முக்கிய மருந்துகள் மற்றும் சித்தா ஆயுர்வேத மருந்துகளை குறைந்த விலையில் பெற்று பயனடையலாம்.
நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ், சரக துணை பதிவாளர்கள் ராமகிருஷ்ணன், கலையரசி, சக்தி பெமிலா, மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி மற்றும் தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்கொடி மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு தலைவர் பொன்னரசு, பேச்சாளர் சண்முக நாராயணன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சைமன், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் ராஜா ஸ்டாலின், ஒன்றிய அவைத் தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய துணை செயலாளர்கள் ஹரி பாலகிருஷ்ணன், ஏஞ்சலின் ஜெனிட்டா ஜெபஸ்டின் மாவட்ட பிரதிநிதி வெயில் ராஜ் நாகராஜன், ஒன்றிய பொருளாளர் ரமேஷ், ஒன்றிய மாணவரணி சற்குணம், தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன் வழக்கறிஞர் அணி மகேந்திரன், மகளிரணி வரலட்சுமி, விஜயலட்சுமி ஜெனிட்டா ஹேமா, சித்ரா, வர்த்தக அணி பொன் செல்வன், விவசாய அணி ஜெகன், ஓட்டுநர் அணி மகாலிங்கம் விளையாட்டு மேம்பாட்டு அணி மாரிமுத்து, கிளை செயலாளர்கள் நெடுஞ்செழியன், சஞ்சய் குமார், அண்ணாமலை, செல்வம், இசக்கி முருகன், சேரந்தையன், செல்வின், சக்திவேல் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.