விளாத்திகுளம் திமுக பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் நகர திமுக பாக முகவர் கூட்டம் நடந்தது
பாக முகவர் கூட்டத்தில், தூத்துக்குடி மக்களவை தொகுதி தேர்தலில் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்கண்டேயன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு, சின்னமாரிமுத்து, மாவட்ட கவுன்சிலர் நடராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், நகர கழக அவைத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணகுமார்,ராமலிங்கம், பொறுப்பாளர் ராமச்சந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் உட்பட திமுக பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.