பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல்- 2024ஐ முன்னிட்டு, 36.தூத்துக்குடி பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதைத்தொடர்ந்து, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு நடைபெறும் மையமான எட்டயபுரம் சி.கே.டி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கோ.லட்சுமிபதி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தபால் வாக்கு வழங்குவதற்கும், வழங்கப்பட்டுள்ள தபால் வாக்குகளை மீண்டும் செலுத்துவதற்கும் ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதி மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

