தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திடிரென டூவிபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் ரேஷன் அாிசியின் தரம் எப்படி இருக்கிறது. என்பதை ஆய்வு செய்த அமைச்சர் புதியதாக தற்போது கூட்டுறவுத்துறை மூலம் நேரடியாக வழங்கப்படும் கோதுமை மாவு எப்படி இருக்கிறது என்று கேட்டறிந்தார்.
பின்னர் சேமியா உள்பட பொருட்களை எடுத்து ஆய்வு செய்தார். துவரம்பருப்பு பாமாயில் போன்ற பொருட்கள் மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். முதல் கட்டமாக வந்த துவரம்பருப்பு வினியோகம் முடிந்து விட்டது. மீண்டும் நாளை துவரம்பருப்பு கடைக்கு வருவதாக தொிவித்துள்ளனர். வந்தவுடன் வழங்கப்படும் பாமாயில் முழுமையாக வழங்கப்பட்டு விட்டதாகவும் ஊழியர் கூறினாா்.
மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் அதிஷ்டமணி, பகுதி செயலாளர் ரவீந்திரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.
