அறுபடை வீடுகளில் ஒன்றான
திருச்செந்தூா் செல்லும்
பாதசாாி பக்தர்களுக்கு சில அடிப்படை பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று ஆன்மீக அமைப்பு சார்பில் கோாிக்கை வைத்திருந்தனர்.
இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு வரும் பாதசாரிகள் தங்கி ஓய்வு எடுத்து செல்வதற்காக பல்வேறு பணிகளை செய்து வரும் நிலையில்.
அதன் ஒரு பகுதியாக முள்ளகாடு விலக்கின் அருகே உள்ள ஊரணியில் புதிதாக நடைபெற்று வரும் பேவர் கற்கள் பதிக்கும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு தொிவிக்கையில் பாதசாரிகள் தங்கி ஓய்வெடுப்பது மட்டுமல்லாது ஊரணியில் பறவைகளும் நீர் அருந்தி செல்வதற்கு ஏதுவாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றார்.
இதே போல் ஜிசிஇ காலணி பகுதியில் ஏற்பட்டுள்ள சாலையின் பள்ளத்தையும் பாா்வையிட்டு சாி செய்யப்பட்டது. உடன் போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பா் உடனிருந்தனர்.

