தூத்துக்குடி மாவட்டம்: காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள நடராஜன் மேல்நிலைப் பள்ளியில் 1999 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும் தாங்கள் பயின்ற பள்ளிக்கு நினைவு பரிசு வழங்கும் விதமாகவும் 05-05- 2024 நேற்று 25வது வருட வெள்ளி விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில்.. மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
இவ்விழாவானது, காலை 8 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது… சிறுவர்களுக்கான மற்றும் மாணவ, மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.. ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. பழைய மாணவர்கள் சார்பாக பள்ளிக்கு குடிநீர் சுத்தம் செய்யும் சாதனம் மற்றும் கைப்பந்து இடுக்கைகள் வழங்கப்பட்டன.

