December 1, 2025
#சினிமா

தளபதி 68 படத்தின் கதை இதுதானா? மேடையில் கூறிய வைபவ்!

அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும் போது, வெளிநாட்டில் வேலை செய்து செட்டிலாகிவிட்டு, தன் கனவை துரத்தி, தன் ஆசையை நோக்கி வந்து தமிழ்நாட்டில் “ரணம்” அறம் தவறேல் படம் எடுத்திருக்கிறார்கள்.

Vijay’s Goat Movie Release Date : விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு GOAT – The Greatest Of All The Time ( ) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகி பாபு, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்து வருகின்றனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் பிகில் படத்திற்கு பிறகு இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு தொடங்கிய GOAT படத்தின் படப்பிடிப்பு சென்னை, தென்னாப்ரிக்கா, ஹைதராபாத், புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்றது. தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

வித்தியாசமான திரைப்படத் தயாரிப்பில் இருக்கும் வெங்கட் பிரபுவுடன் விஜய் தனது அடுத்த படத்தை அறிவித்தபோது, ​​ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *