December 1, 2025
#செய்தி #வானிலை

தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வானிலை ஆய்வாளர்கள் தென்காசி வெதர்மேன் ராஜா தனது வலை பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள தகவல்

வெப்பசலனம் மற்றும் காற்று வீசும் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

கடலூர் மயிலாடுதுறை தஞ்சை நாகை திருவாரூர் புதுக்கோட்டை இராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங்களில் இன்று மாலை இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பதிவாகும். விருதுநகர் மதுரை சிவகங்கை தேனி திண்டுக்கல் திருச்சி அரியலூர் பெரம்பலூர் திருவண்ணாமலை நாமக்கல் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி வேலூர் திருப்பத்தூர் ஈரோடு ஆகிய உள் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இது வெப்பசலன மழை என்பதால் பகல் நேரங்களில் கடுமையான வெயிலும் மாலை இரவு நேரங்களில் தான் மழை பெய்யும் என பதிவிட்டுள்ளார்.