ஜூன் 24 தமிழ் நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தியதால் பலர் பலியான சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அதிமுகவினருக்கு அழைப்பு.
இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணா புரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி அபாயக் கட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆருதல் கூறிய அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தவு, சட்டம் ஒழுங்கை பாதுக்காக்கவும் தவறிய திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுருத்தி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட உத்தரவிட்டுள்ளார் அதன்படி தூத்துக்குடியில் நாளை 24.06.2024 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி விவிடி சிக்னல் எம்.ஜி.ஆர் திடலில் வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, மாநகரபகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், மகளிர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அதிமுகவினருக்கு அழைப்பு!

