December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

கண்தான விழிப்புணர்வு கருத்தரங்கம்

கோவில்பட்டி மைக்ரோபாயிண்ட் கல்வி நிறுவனம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில்

மைக்ரோபாயிண்ட் கல்வி நிறுவன வளாகத்தில் கண்தான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு புளூவான் டெக் மென்பொருள் நிறுவன நிர்வாக இயக்குனர் ரோஜர் அப்ரின் தலைமை தாங்கினார்.
விடிவெள்ளி கல்வி அறக்கட்டளை இயக்குனர் ஷீலா ஜாஸ்மின் முன்னிலை வகித்தார்.
மைக்ரோபாயிண்ட் கல்வி நிறுவன முதல்வர் ஆர்ம்ஸ்டிராங் வரவேற்றார்.

அரவிந்த் கண் மருத்துவமனை மூத்த மருத்துவர் ஹரிணி கிருஷ்ணா கண்தான முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார்.

கோவில்பட்டி கண்தான
இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் மற்றும் பிரசன்னா வாழ்த்துரை வழங்கினார்கள்.

மைக்ரோபாயிண்ட் கல்வி நிறுவன தலைமை பயிற்சியாளர் செல்வி நன்றி கூறினார்.

கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சாரதா, ஜெயஸ்ரீ, ஷாலினி, சுபா, கவி, ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர்.