December 1, 2025
#தற்போதைய செய்திகள்

“இந்துக்கள் நிலம் இந்துக்களுக்கே..” தலிபான் அரசு எடுத்த அதிரடி முடிவு.. உற்று பார்க்கும் இந்தியா

அமெரிக்கப் படைகள் வெளியேறிய சில வாரங்களிலேயே ஆப்கனை மீண்டும் தலிபான்கள கைப்பற்றினர். இப்போது அங்கே தலிபான் ஆட்சியே நடந்து வரும் நிலையில், அங்கு சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்துக்களின் நிலம்: அதாவது ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அமைப்பினர் முந்தைய ஆட்சியாளர்கள் இந்து மற்றும் சீக்கிய சிறுபான்மையினரிடம் இருந்து கைப்பற்றிய நிலங்களை மீண்டும் அவர்களுக்கே திரும்பி அளிக்கும் நடைமுறையைத் தொடங்கியுள்ளனர்.

தலிபான்கள் அங்கே ஆட்சியைப் பிடிக்கும் முன்பு அமெரிக்கா ஆதரவுடன் அஷ்ரப் கனி அதிபராக இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் இந்த நிலம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது இது தொடர்பாக தலிபான் அதிகாரிகள் கூறுகையில், “நீண்ட காலமாக இடம்பெயர்வு செய்த மற்றும் ஓரங்கட்டப்பட்ட ஆப்கானிஸ்தான் மத சிறுபான்மையினர் அனுபவிக்கும் அநீதிகளைச் சரி செய்வதில் இந்த நடவடிக்கை ஒரு முக்கியமானதாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

இந்திய அதிகாரிகளும் இதை ஒரு பாசிட்டிவ் நடவடிக்கையாகவே கருதுகிறார்கள். தலிபான்: தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் இது குறித்து மேலும் கூறுகையில், “முந்தைய ஆட்சியாளர்கள் முறைகேடாக அபகரித்த அனைத்து சொத்துக்களையும் அவற்றின் உரிமையாளர்களுக்குத் திருப்பித் தர நீதி அமைச்சர் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்துள்ளோம். அதேபோல தலிபான் அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட பிறகு நாட்டில் இருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான நரேந்தர் சிங் கல்சாவும் இப்போது ஆப்கனுக்கு திரும்பி இருக்கிறார்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *