December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

விளையாட்டு வயதிலும் படிப்பு அவசியம் மேயர்ஜெகன் பொியசாமி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தலைமை ஆசிாியர் எமல்டா வெலன்சியா ஹெஸியா தலைமை வகித்தார்.

மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் தளபதியாாின் திராவிட மாடல் ஆட்சியின் அரசு பள்ளிகளில் மாணவா்களின் சேர்க்கை அதிகாாித்துள்ளது. இந்த பள்ளியில் கூட கொரோனா காலக்கட்டத்தில் 400 பேர் தான் படித்தார்கள். இப்போது 1200 பேர் படிக்கின்றனர். இனி எத்தனை பேர் வந்தாலும் சேர்த்து கொள்ளப்படுவார்கள். மாநகராட்சி பள்ளிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட்டு கல்வியை மேம்படுத்தி மாணவ மாணவிகளை நல்ல திறமை பெற்றவர்களாக உருவாக்குவதற்கு கனிணி உள்பட பல்வேறு அறிவியல் பூா்வமாக கட்டமைப்புகளை உருவாக்கிஉள்ளோம்.
தளபதியார் ஆட்சியில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. உங்கள் எல்ேலாருக்கும் ஆரோக்கியம் முக்கியம் அதற்கு அனைவரும் சைக்கிள் ஓட்டவேண்டும். 80 வயது வரை நல்ல ஆரோக்கியமாக வாழலாம்.
உள்ளுர் நிலவரம் முதல் அமொிக்காவில் நடைபெறும் சம்பவங்கள் வரை சில நிகழ்வுகளை தொலைகாட்சி மூலமும் தொிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கூடத்தையும் மேம்படுத்துவதற்கென்று என கல்விக்குழு செயல்பட்டு வருகிறது.

தேவையானவைகளை அவர்களிடமும் சொல்லலாம் என்னிடமும் சொல்லலாம், மாநகராட்சி பகுதிகளில் தினசாி 120 டன் குப்பை 60 வார்டுகளிலும் சேகாிக்கப்பட்டு அதை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிாித்து மக்கும் குப்பை உரத்தை மாநகராட்சி பகுதிக்குள் உள்ள அத்திமரப்பட்டி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தேவையென்றால் யாா் வேண்டுமானாலும் வாங்கிகொள்ளலாம் மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்க வேண்டும். அதற்கு பள்ளி மாணவ மாணவிகளும் தலா ஓரு மரக்கன்றுகளை நட வேண்டும். அப்போது தான் அந்த அந்த காலக்கட்டத்தில் பருவமழையும் பொழியும் உங்களை பெற்ற தாய் தந்தையர்கள் கஷ்டங்களை உணர்ந்து படிக்க வேண்டும். இப்போது நீங்கள் ஜாலியாக இருந்து விளையாட்டு பிள்ளையாக இருப்பீர்கள். விளையாட்டும் முக்கியம் உங்கள் எதிர்காலமும் முக்கியம் என்பதை உணர்ந்து நல்லமுறையில் படிக்க வேண்டும் உங்களது தாத்தா பாட்டி பல ஆரோக்கியத்தின் மூலம் இன்றும் சிலர் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்கள் கையாண்ட நல்ல பழக்க வழக்கங்கள் ஓழுக்கத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசினார். பின்னர் மாணவ மாணவிகளுக்கு நோட்புக் 5ஸ்டார் சாக்லேட், வழங்கி புதிய மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்து பள்ளி வளாகத்தில் நடைபெறும் மற்றும் புதிய வகுப்பறை கட்டடிங்களில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை ரூசித்து பார்த்தாா்.

பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, கவுன்சிலர்கள் பாப்பாத்தி, முத்துமாாி, முன்னாள் கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியன், இசக்கிமுத்து, முன்னாள் மாநகர விவசாய அணிதுணை அமைப்பாளர் ஆவுடையப்பன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜோஸ்பா், மேயாின் நேர்முக உதவியாளா் ரமேஷ், உள்பட ஆசிாியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பொறுப்பு ஆசிாியர் ஜெபா எபனேசர் நன்றியுரையாற்றினார்.