December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம் #விளாத்திகுளம்

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகலாபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கலையரங்கம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகலாபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டிடம் கட்ட விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் கலந்து கொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் கிழக்கு ஓன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மாவட்ட கவுன்சிலர் நடராஜன், நாகலாபுரம் கிராம பஞ்., தலைவர் உலகம்மாள் முனியசாமி, புதூர் திமுக நகர செயலாளர் மருதுபாண்டியன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.