December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம் #விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் சாலையோரத்தில் ரேசன் அரிசி பறிமுதல் …..

விளாத்திகுளத்தில் சாலையோரத்தில் கிடந்த 10 மூட்டை ரேஷன் அரிசியை விளாத்திகுளம் வருவாய்ததுறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தாசில்தார் ராமகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, வட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து மற்றும் பொறியாளர் கணேஷ் ஆகியோர் விளாத்திகுளம் – எட்டயாபுரம் சாலையில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எட்டயபுரம் சாலை வைப்பார் ஆற்று பாலம் அருகே வேம்பு மரத்தின் கீழ் 10 மூட்டைகளில் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது.

 

இதனைதொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் ராமகிருஷ்ணன், துணை தாசில்தாா் பாலமுருகன் ஆகியோர் அரிசி மூடையை சோதனை செய்தனர். இதில், அந்த அரிசி மூடைகளில் இருந்தது பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி என்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் பின்னர் சுமார் 700 கிலோ எடை கொண்ட 10 ரேஷன் அரிசி மூடைகள் அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு விளாத்திகுளம் தமிழ்நாடு நுகர்வு பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.