தூத்துக்குடி சேலத்தில் கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞரணியினர் கலந்து கொண்டனர்.
அவ்வாறு வாகன பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு திமுக தலைமை மூலம் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அதன்படி, வாகன பேரணியில் வள்ளுவர் மண்டலம், தூத்துக்குடி மாவட்டம் சார்பில் கலந்து கொண்ட இளைஞரணியினருக்கு தலைமைக்கழகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை தூத்துக்குடி புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜோயல் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், திமுக இளைஞரணி வள்ளுவர் மண்டல பொறுப்பாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான வழக்கறிஞர் பால்துரை, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோ, வர்த்தகஅணி துணை அமைப்பாளர் பிரேம் ஆதித்தன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரவின், சேக் முகமது, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட துணை செயலாளர்கள் சிவமுருகன், முருகன், மாநகர செயலாளர் ராஜா, திருச்செந்தூர் சுரேஷ்குமார், மரிய அந்தோணி சகிலன், மரிய அருள்பாரி, சரவணன், ஆனந்த், பாரதி, சங்கர், பாலகணேஷ், ரவி பிரகாஷ், பாலா, ஜான் ஸ்டாலின், செல்வக்குமார், மொய்தீன், வேல்முருகன் மற்றும் தினகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

