தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து மடத்தூர் மீன்வளக்கல்லூாி உள்பட பல்வேறு பகுதிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டு தொிவிக்கையில்
தூத்துக்குடி மாநகரத்தில் ஏற்கனவே பக்கிள் ஓடை இருந்தாலும் புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு கழிவுநீர் கால்வாய்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அது பல்வேறு இடங்களில் வௌியேறும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் உள்ள கால்வாய்கள் இனைக்கும் சாலை, முத்துநகர் கடற்கரை வழியாக கடலுக்குள் செல்கின்றன.
ஆகவே மாநகர மக்கள் எந்தவித ஐயமும் கொள்ள வேண்டாம் பொதுமக்கள் நலன் கருதி தேங்கும் மழைநீரை சில பகுதிகளில் வழித்தடம் இல்லாத நிலையில் இருக்கும் இடங்களில் கழிவுநீர் லாரிகள் மூலம் தண்ணீர் உறிஞ்சி அப்புறப்படுத்தப்படும் தொற்றுநோய் பரவாத வகையில் பிளிச்சிங் பவுடர் தௌிக்கப்படும் மக்கள் மரம் மின்கம்பம் பழமையான கட்டிடம் பகுதிகளில் மழைக்கு ஓதுங்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எல்லா முன்னெச்சாிக்கை நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு என்றும் மாநகராட்சி நிர்வாகமானது தயார் நிலையில் இருக்கின்றது என தொிவித்தார்.
ஆய்வின் போது போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பா் ஆகியோர் உடன்சென்றனர்.
மழை முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது மேயர் ஜெகன் பொியசாமி தகவல்.

