2024 இந்தியாவின் பொதுத் தேர்தல் பதினெட்டாவது மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 19 ஏப்ரல் வாக்கு பதிவு நடைபெற இருக்கிறது.
மேலும் நாடாளமன்றத்தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது .இதை முன்னிட்டு, தேர்தல் பரப்புரை இன்று 17/4/2024 மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது என்பதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை சூறா வழியாக சுழன்று வாக்கு சேகரிப்பில் களத்தில் இறங்கி உள்ளனர் .

