December 1, 2025
#அரசியல் #தூத்துக்குடி மாவட்டம்

தேமுதிக கொடி நாள் விளாத்திகுளத்தில் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாட்டம

தேமுதிக கொடி நாளை முன்னிட்டு விளாத்திகுளத்தில் தேமுதிகவினர் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தேமுதிக 25ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேமுதிக வெள்ளி விழா 25-ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டம், பகுதி, நகரம் ஒன்றியம், பேரூர், ஊராட்சி கிளைகள், அனைத்து கிராமப்புற கிளை பகுதிகளில் பழைய கொடிகளை அகற்றி, புதிய கொடிகளை ஏற்றி, கட்சி கொடிகள் இல்லாத இடத்தில் புதுக் கொடிகளை ஏற்றிட வேண்டும்.

விஜயகாந்தின் கோட்பாட்டின் படி “இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே” என்ற அடிப்படையில் நம்மால் முடிந்த உதவிகளை மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், மற்றும் முதியவர்களுக்கு செய்ய வேண்டுமென கடிதம் எழுதியதை தொடர்ந்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் வழிகாட்டுதலின்படி, விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி தலைமையில், நகரச் செயலாளர் கோட்டைச்சாமி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். மாவட்ட தொழிற்சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம், ஒன்றிய துணை செயலாளர் முருகேசன்,மாவட்ட பிரதிநிதி வீராச்சாமி, அவை தலைவர் மணிகண்டன்,நகர துணை செயலாளர் சங்கர் கணசேன், ஒன்றிய மாணவரணி செயலாளர் ஜீவா, சிங்கிலிபட்டி ராஜேந்திரன், கோடாங்கிபட்டி ராமசாமி, துலக்கன்குளம் ஸ்டீபன் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.