தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெருவைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், தூத்துக்குடி கணேஷ் நகரில் ஆண்-பெண் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இங்கு விபசாரம் நடப்பதாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தகுமரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில் அங்கு பாண்டிச்சேரி, திருப்பூர், கோவை பகுதிகளைச் சேர்ந்த பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. இது தொடர்பாக குமரி மாவட்டம், குளச்சல் கொட்டில்பாடு பணியடிமை மகன் சேவியர் ஸ்டாலின் சிபு (24) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அங்கிருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பியூட்டி பார்லர் நக்ஷ உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

