அதானி குழுமம். தனது வர்த்தக கட்டுப்பாட்டில் இருக்கும் அம்புஜா சிமெண்ட்ஸ், மற்றும் ஏ.சி.சி ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்கள் இருந்தாலும்,

இந்தியாவில் 2 வது பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக இருக்கும் அதானி சிமெண்ட் தென்னிந்தியாவில் தனது வர்த்தகத்தை பலப்படுத்த தூத்துக்குடி நிறுவனத்தை சத்தமில்லாமல் வாங்கியுள்ளது.

துத்துக்குடியில் அமைந்துள்ள 1.5 மில்லியன் டன் திறன் கொண்ட சிமெண்ட் உற்பத்திக்கு முக்கியமான கிரைண்டிங் ஆலையை ரூ.414 கோடிக்கு மை ஹோம் குழுமத்திடம் இருந்து கையகப்படுத்தியுள்ளது அம்புஜா சிமெண்ட்ஸ்.
இந்த கையகப்படுத்துதலின் மூலம், அதானி குழுமத்தின் மொத்த சிமெண்ட் உற்பத்தி திறன் தற்போது சுமார் 79 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள இந்த சிமெண்ட் கிரைண்டிங் ஆலையை கையகப்படுத்தியது மூலம் ஆம்புஜா சிமெண்ட்ஸின் வளர்ச்சி பாதையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவில் அதிகரித்து வரும் சிமெண்ட் தேவையில் பெரும் வர்த்தகத்தை கைப்பற்றவே தூத்துக்குடி நிறுவனம் கைப்பற்றப்பட்டு உள்ளது.
அதேபோல் ஆம்புஜா சிமெண்ட்ஸில் அதானி குழுமத்தின் பங்கு இருப்பை அதிகரிக்க இந்நிறுவனம் வெளியிட்ட வாரண்ட்டுகளை முழுமையாக வாங்க முடிவு செய்து சுமார் ரூ.8,339 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம், ஆம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் அதானி குழுமத்தின் பங்கு இருப்பு 63.2 சதவீதத்திலிருந்து 70.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

