மார்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது
கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சட்ட விதிகள் ஆய்வுக் குழுத் தலைவர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத்
துறை, உள் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை குறித்த குறிப்பாணைகளும், அறிவிக்கைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் பூந்தமல்லி தொகுதி கிருஷ்ணசாமி,ஜெயம்கொண்டம் தொகுதி கண்ணன்,சேலம் தெற்கு பாலசுப்பிரமணியன்,திண்டிவனம் தொகுதி அர்ஜுனன், சாத்தூர் தொகுதி ரகுராமன் , ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மான்ராஜ்,விளவங்கோடு தொகுதி
முனைவர் தாரகை கத்பட் மற்றும் சட்டமன்றப் பேரவையில் அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

