சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு இறுதியில் அசர்பைஜானில் துவங்கப்பட்டு சில மாதங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. அஜித்தின் கார் சேஸிங் காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கப்பட்டன. இதில் அஜித்துடன் அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்டவர்களும் இணைந்திருந்தனர். இந்நிலையில் அசர்பைஜானில் தொடர்ந்து சூட்டிங் நடத்த உகந்த காலச்சூழல் இல்லாத காரணத்தையடுத்து அந்த சூட்டிங்கை முடித்துக் கொண்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர். இந்நிலையில் மீண்டும் அசர்பைஜானிலேயே சூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் ஏப்ரல் மாதம் 10ம் தேதி அசர்பைஜானிலேயே மீண்டும் துவங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வரும் 19ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முடித்து விட்டு அதன் பிறகு இந்த படத்தின் ஷூட்டிங்கை வைத்துக் கொள்ளுமாறு நடிகர் அஜித் கூறியதாகவும் இதையடுத்து இந்த படத்தின் சூட்டிங் வரும் 20ம் தேதி அசர்பைஜானில் துவங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் 70% சூட்டிங் முன்னதாக நிறைவடைந்ததாக கூறப்பட்ட சூழலில் தொடர்ந்து ஒரே கட்டமாக படத்தின் ஷூட்டிங்கை மே மாதத்திற்குள் நிறைவு செய்ய படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.நடிகர் அஜித்: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது. படம் ரிலீசாகி ஒரு ஆண்டு நிறைவடைந்த சூழலில் அவரது அடுத்த படம் ரிலீஸ் ஆகாத சூழல் காணப்படுகிறது. கடந்த ஆண்டிலேயே அஜித்தின் பிறந்த நாளையொட்டி விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால் உடனடியாக சூட்டிங் துவங்கப்படாத சூழலில் கடந்த ஆண்டு இறுதியில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் அசர்பைஜானில் துவங்கியது. தொடர்ந்து சில வாரங்கள் படத்தின் ஆக்ஷன் காட்சிகளும் கார் சேஸிங் காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டது. இதில் அர்ஜுன் த்ரிஷா ஆரவ் உள்ளிட்டவர்கள் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தனர்.மீண்டும் சூட்டிங்: இந்நிலையில் தொடர்ந்து அங்கு ஷூட்டிங் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. பனிமழை உள்ளிட்டவற்றின் காரணமாக சூட்டிங்கை தொடர முடியாத சூழலில் அங்கிருந்து படக்குழுவினர் அந்த ஷெட்யூலை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினர். இதையடுத்து மற்ற லொகேஷன்களில் படம் எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அசர்பைஜானிலேயே படத்தின் ஷூட்டிங்கை தொடர படக்குழு தற்போது திட்டமிட்டுள்ளது. இதன் சூட்டிங் வரும் 10ம் தேதி துவங்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தமிழகத்தில் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் அதையடுத்தே படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.அஜித் பிறந்தநாளில் அப்டேட்: நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வகையில் அஜித் இந்த ஷூட்டிங்கை மேலும் 10 நாட்கள் தாமதப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அஜித் -திரிஷா காம்பினேஷன் காட்சிகள் அசர்பைஜானின் அடுத்ததாக எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் மே 1ம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்த நாளையொட்டி இந்த படத்தின் அப்டேட் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டீசர் உள்ளிட்டவை வெளியாகுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ள சூழலில் படத்தின் போஸ்டர் மட்டுமே வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்துவிட்டு படத்தின் டீசர் உள்ளிட்டவற்றை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.தீபாவளி ரிலீஸ்: இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக ஜூன் மாதம் 13ம் தேதி அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் அஜித்தின் விடாமுயற்சி படம் தீபாவளியை ஒட்டி வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் அக்டோபர் மாத இறுதியில் வெளியாகலாம் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் விடாமுயற்சி.. அஜித் பிறந்தநாளில் வெளியாகும் சூப்பர் அப்டேட்!

